×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம்

திருவள்ளூர், ஜன. 31:திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன்.எம்.எல்.ஏ., - ப.குப்பாபாய், செங்கை எஸ்.கே.சேகர் - வட்டாட்சியர் ஜெ.சுமதி ஆகியோரின் மகனும், மாவட்ட மாணவரணி செயலாளரான எஸ்.ராகேஷ், பாடியநல்லூர் பி.மணிவண்ணன் - எம்.பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் எம்.பவித்ரா ஆகியோரது திருமண விழா நேற்று பாடியநல்லூர், முனீஸ்வரர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்  நடைபெற்றது.
ஆலயத்தின் மகா மண்டபம் அருகில் அமைந்துள்ள திடலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மாங்கல்யத்தை மணமகன் ராகேஷிடம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.   விழாவில் அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், நிலோபர் கபில், ராஜலட்சுமி, வளர்மதி, பா.பெஞ்சமின் மற்றும் எம்எல்ஏக்கள் வி.அலெக்சாண்டர், கே.எஸ்.விஜயகுமார் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹிம் மற்றும் தம்பிதுரை, சி.பொன்னையன், ஆர்எம்கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம்,

துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யளமஞ்சி பிரதீப், ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, வி.மனோகரன், முன்னாள் எம்பி வேணுகோபால், மாநில பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார், முன்னாள் எம்எல்ஏ  இரா.மணிமாறன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், எஸ்.எஸ்.எஸ்.இரா.சரவணன், மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.திருமண விழாவில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் கே.பார்த்தீபன், வக்கீல் என்.வி.சரவணன், எம்.திருநாவுக்கரசு, எம்.சரவணன், ஜெயலட்சுமி சரவணன், பாஸ்கரன்,  ஜெயராமன், எஸ்.சூர்யா, எஸ்.ஸ்ருதி, வி.நேகா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

Tags : Kiraniyam P. Balaraman MLA ,Thiruvallur West District ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...